Saturday, December 21, 2024

அமெரிக்கா செல்லும் முதல்வர் ; ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு 

அமெரிக்கா செல்லும் முதல்வர் ; ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

Chief Minister to America; IAS Additional responsibility for officers

  • விஜிலென்ஸ் கமிஷ்னர் பதவியை குடிநீர் வடிகால் வாரியத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரான மணிவாசன் ஐ.ஏ.எஸ்.சுக்கு கூடுதல் பொறுப்பு

  • வருவாய் நிர்வாக கமிஷ்னர் பதவியை வருவாய்த்துறை செக்ரட்டரியாக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதல் பொறுப்பு

சென்னை, ஆக. 28

அமெரிக்கா செல்லும் முதல்வர் ; ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு : இன்று இரவு அமெரிக்காவுக்கு புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின். செல்வதற்கு முன்பு இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த மாற்றங்களை செய்துள்ளார்.

தமிழக அரசின் விஜிலென்ஸ் கமிஷ்னர் மற்றும் வருவாய் நிர்வாக கமிஷ்னர் ஆகிய 2 பொறுப்புகள் வகித்த கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரை, தமிழக அரசின் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமித்தார் ஸ்டாலின்.

பிரபாகர் மாற்றப்பட்ட நிலையில், அவர் வகித்த 2 பதவிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில், விஜிலென்ஸ் கமிஷ்னர் பதவியை குடிநீர் வடிகால் வாரியத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரான மணிவாசன் ஐ.ஏ.எஸ்.சுக்கு கூடுதல் பொறுப்பாகவும், வருவாய் நிர்வாக கமிஷ்னர் பதவியை வருவாய்த்துறை செக்ரட்டரியாக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதல் பொறுப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்திருக்கிறார்.

அமைச்சரவை மாற்றம் இல்லை: சமீபத்தில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : நவீன 150 புதிய பேருந்துகள் : கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த மாற்றம்தான் செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது உறுதி. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வெளிநாடு செல்லும் முன் இதை செய்ய வேண்டாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.

செந்தில் பாலாஜி விரைவில் வரலாம். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை தாமதம் செய்கிறார்கள். செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். ஆனால் ஸ்டாலின் அவருக்காக காத்து இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் சீனியர் ஜூனியர் மோதல் தொடங்கி உள்ளது . ஜூனியர் சிலர் அமைச்சர் ஆவதை சில சீனியர்கள் விரும்பவில்லை.

மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதானவழக்கில் இதுவரை வைக்கப்பட்ட வாதங்கள் கவனம் பெறுகின்றன. அவர் மட்டுமல்ல வேறு சில விவகாரங்களும் இதற்கு காரணம் என்கிறார்கள்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles