Home News பாகிஸ்தான் எல்லையில் சீன டிரோன் பறிமுதல்

பாகிஸ்தான் எல்லையில் சீன டிரோன் பறிமுதல்

0
பாகிஸ்தான் எல்லையில் சீன டிரோன் பறிமுதல்
  • நேற்று பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்ட பகுதியில் பறந்தது சீன டிரோன் 

  • உடனடியாக அவர்கள் அந்த ஆளில்லா டிரோனை பறிமுதல் செய்ய உத்தரவு

பாகிஸ்தான், பிப். 21

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப்  மாநிலத்தின் எல்லை பகுதிகள் வழியாக அடிக்கடி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதையடுத்து அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்ட பகுதியில் நேற்று ஒரு டிரோன் பறப்பதை அதிகாரிகள் பார்த்தனர். இதுபற்றி வீரர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையும் படியுங்கள் : ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

உடனடியாக அவர்கள் அந்த ஆளில்லா டிரோனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி பசில்கா பகுதியில் கானியாகே கிராம பகுதியில் அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

அந்த டிரோனை ஆய்வு செய்தபோது அது சீன தயாரிப்பு டிரோன் என தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் இது 2வது சம்பவம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

இதையும் படியுங்கள்