-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் கோரிக்கை மாநாடு இன்று நடந்தது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர்.
-
சி.ஐ.டி.யு. மாநில தலைவர் ஏ.சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை, மார்ச்.14
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு. சார்பில் கோரிக்கை மாநாடு இன்று நடந்தது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர்.
போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலன் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மாநாடு நடத்தப்பட்டது. இதற்கு சி.ஐ.டி.யு. உதவி தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் வி.தயானந்தம் வரவேற்றார்.
இதையும் படியுங்கள் : பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி 17 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைவர் எம்.அன்பரசு, தலைமை செயலக ஊழியர் சங்க தலைவர் வெங்கடேசன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில், மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச்செயலாளர் எஸ். ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் திருச்செல்வன், சி.ஐ.டி.யு நுகர்பொருள் வாணிப கழக புவனேஸ்வரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது செயலாளர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் கர்ஸன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கோரிக்கை தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். சி.ஐ.டி.யு. மாநில தலைவர் ஏ.சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
பல்லவன் இல்லம் முன்பு சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை முழக்கமிட்டு பேசினர். முடிவில் சசிகுமார் நன்றி கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.