
முதலமைச்சர் 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தம் எதிரொலி ;மே 12-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
cm hold the 12hours work bill relect ; may 12 strike cancel
-
தி.மு.க. தொழிற் சங்கம் மற்றும் கூட்டணி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன
-
மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப். 25
தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு வேலை நேரம் 8 மணி நேரம் என இருந்து வரும் நிலையில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டசபையில் சட்ட மசோதா நிறை வேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. தொழிற் சங்கம் மற்றும் கூட்டணி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. போன்ற தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.
பல்வேறு தொழிற்சங்கங்கள் மே 12-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தன. இந்நிலையில் அரசு சார்பில் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தொழிலாளர்துறை செயலாளர்கள், அரசு செயலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையும் படியுங்கள் : செல்வமகள் சேமிப்புத் திட்டம் : அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட தமிழகம் 2-வது இடம்
பேச்சுவார்த்தையில் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்தனர். தி.மு.க. தொழிற்சங்கமும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியது. இந்த மசோதாவை திரும்ப பெற கோரி கூட்டணி கட்சி தலைவர்களும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நேரில் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் தமிழ்நாடு திருத்த சட்ட மசோதா சட்டபேரவை சட்ட மசோதா எண். 8/2023 என்ற சட்ட முன் வடிவின் மீதான மேல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தன. மே 12-ந் தேதி மசோதாவை கண்டித்து போராட்டம் அறிவித்திருந்தோம்.
இந்நிலையில் மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே வேலை நிறுத்தப் போராட்ட முடிவை கை விடுகிறோம் என கூறி உள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.