-
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து.
-
தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, மார்ச் 1
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
‘மார்ச் 1 திராவிட பொன்நாள்’ என்றும் முயற்சி… முயற்சி… முயற்சி… அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ தொடக்க விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி வாழ்த்து:
பிரதமர் மோடி டுவிட்டரில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்”என பதிவிட்டுள்ளார். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“70-வது பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.