
-
நடிகர் மயில்சாமி இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் மயில்சாமிக்கு தற்போது 57 வயது தான் ஆகிறது.
-
சிவன் கோயிலில் இரவு முழுக்க சிவராத்திரி பூஜையில் பங்கேற்று இருந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் நடிகர் மயில்சாமி காலமாகி இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்
சென்னை, பிப்.19
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று காலமானார்.
சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் மயில்சாமி இருந்திருக்கிறார்.
சிவன் கோயிலில் இரவு முழுக்க சிவராத்திரி பூஜையில் பங்கேற்று இருந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் நடிகர் மயில்சாமி காலமாகி இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்.
1996 ஆம் ஆண்டு மர்மதேசம் சீரியலில் சந்தானகிருஷ்ணன் ஆக நடித்த நடிகர் மயில்சாமி அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களில் பல நடிகர்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிய நடிகர் மயில்சாமி இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் மயில்சாமிக்கு தற்போது 57 வயது தான் ஆகிறது.
இந்த நிலையில் இவர் இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். இவருடைய இறப்பு அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிகமாக அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் மயில்சாமியின் நண்பர்களும் அவருக்கு இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மயில்சாமியுடன் நண்பரும் நடிகருமான நடிகர் சரத்குமார் எனது நல்ல நண்பரும் சிறந்த மனிதருமான மயில்சாமியின் அகால மரணத்தை கேட்டு அதிர்ச்சியும் அடைந்தேன். ஆழ்ந்த வருத்தம். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலக சக ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எனது அன்பு நண்பரும் மிகச் சிறந்த மனிதரும் தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும் சிறந்த விரிவுரையாளருமான மயில்சாமி அவர்கள் திடீர் உடல்நல குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மன வேதனையும் அளிக்கிறது என்று உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள் : நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
சரத்குமாரை தொடர்ந்து அவருடைய மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். இது மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது பத்திரிக்கையில் இருந்து இந்த செய்தியை கேட்டதும் நம்ப விரும்பவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவரை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் ஆழ்ந்த இரங்கல்கள் மயில்சாமி அண்ணா என்று பதிவிட, நடிகரும் பிக் பாஸ் பிரபலமாக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி இது எதிர்பார்க்காத நாள் ஆழ்ந்த இரங்கல்கள் டியர் ஃப்ரெண்ட் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நடிகர் மயில்சாமியோடு பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகர் மனோபாலா, கொடுமை கொடுமை கொடுமை என்று தன்னுடைய வருத்தத்தை பதிவிட்டு இருக்கிறார். தொடர்ந்து பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் நடிகர் மயில்சாமிக்கு இரங்கல் செய்தி தெரிவித்து வரும் நிலையில் அவருடைய பெயர் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.