Home செய்திகள் காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து – மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து – மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு

0
காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து – மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு
Contract to provide breakfast program to private sector cancelled - Mayor R. Priya announces

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து – மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு

Contract to provide breakfast program to private sector cancelled – Mayor R. Priya announces

  • தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

  • அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை, ஜன. 31

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து – மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு:

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை மேயர் ஆர்.பிரியா உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு காலை உணவுத் திட்டத்துக்காக உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு காலை உணவு சமைப்பதற்கான திட்டத்தை அரசு, தனியாரிடம் கொடுக்கலாம் என முயற்சி செய்தது. இதற்கான டெண்டரும் விடப்பட்டிருந்தது. ஆனால் இந்த டெண்டருக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்திருந்தன. கடந்த 2023 ஆம் ஆண்டே காலை உணவுத் திட்டத்துக்காக உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது.

இதற்காக தீர்மானமும் கொண்டு வந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இதைத் தொடர்ந்துதான் அந்த முயற்சி கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் அரசு தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கும் முடிவை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இது குறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அறிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் : 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களிடமும் பேசி முடிவு செய்யப்படும் என கூறியிருந்த நிலையில் தற்போது காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். இந்த காலை உணவு திட்டத்தை மாநகராட்சியே செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வரின் காலை உணவு திட்டம் , முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கப்பட்டது.

இதன் மூலம் 1.14 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றனர். இந்த திட்டம் பெற்றோர், மாணவர்களிடையே பெரும் வரவேற்பை அளித்தது. இதையடுத்து கடந்த 25.8.2023 இல் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்தநாள் அன்று முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கினார். இதனால் அரசு உதவி பெறும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.