Home செய்திகள் கொரோனா: வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரணை- சென்னை உயர் நீதிமன்றம் பதிவுத்துறை அறிவிப்பு

கொரோனா: வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரணை- சென்னை உயர் நீதிமன்றம் பதிவுத்துறை அறிவிப்பு

0
கொரோனா: வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரணை- சென்னை உயர் நீதிமன்றம் பதிவுத்துறை அறிவிப்பு
madurai high court

 

வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் – சென்னை உயர் நீதிமன்றம் பதிவுத்துறை அறிவிப்பு

CORONO : CASES WILLBE HEARD THROUGH VIDEO CONFERENCING – CHENNAI HIGH COURT REGISTRY ANNOUNCED

  • சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் இன்று (10-ந் தேதி) முதல் வீடியோ கான்பரன்சிங் முறை

  • வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல்

மதுரை, ஏப் .10

கொரோனா பரவல் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், உயர் நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

 

வீடியோ கான்பரன்சிங்

அதன்படி சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் இன்று (10-ந் தேதி) முதல் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை
உயர் நீதிமன்றம் பதிவுத்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று

நேரடியாக வழக்குகள் விசாரணை நடந்தாலும், வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுநல வழக்குகளை தொடுத்து நேரடியாக ஆஜராகுபவர்கள் உள்ளிட்டவர்கள் முடிந்தவரை கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலும், கோர்ட்டு அறைகளில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் பதிவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள் : சேவ் உக்ரைன் அமைப்பால் 31 குழந்தைகள் மீட்பு

ஆன்லைன் வசதி

அதே போல் வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை
உயர் நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெற்றது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.