சைக்கிள் போட்டி : 3 அணிகள் ; 24 கி.மீ தொலைவு | அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்
cycle race : 3 teams ; 24 km distance | minister udhayanithi Stalin flagged off the inauguration
-
வெளிநாட்டு, வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் 179 பேர் உட்பட மொத்தம் 1,125 பேர் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டனர்.
-
நிர்ணயிக்கப்பட்ட 3 திருப்பங்களிலும் டிஜிட்டல் டயர் பதிவு கருவிகள் வைத்து துல்லியமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
மாமல்லபுரம், அக். 15
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் இன்று தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த சைக்கிள் போட்டி நடை பெற்றது.
3 கட்டமாக போட்டிகள்
அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 24 கி.மீ தூரம் கொண்ட பெண்களுக்கான போட்டியும் நடைபெற்றது.
கோவளம், வடநெம்மேலி, பூஞ்சேரி என மூன்று திருப்பங்களுடன் 3 அணிகள், என வெளிநாட்டு, வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் 179 பேர் உட்பட மொத்தம் 1,125 பேர் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 3 கட்டமாக இந்த போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியின் போது பிற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, அப்பகுதியில் இரு வழித்தடங்களிலும் இன்று அதிகாலை 4 மணி முதல் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் கிழக்கு கடற்கரை சாலை வெங்கம்பாக்கத்தில் திருப்பி செங்கல்பட்டு வழியாக காலை 9 மணிவரை சென்றது. இதேபோல் கார், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் பூஞ்சேரியில் மாற்றுப்பாதையில் திரும்பி ஓ.எம்.ஆர் வழியாக சென்றன.
கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடியது
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வாகனங்கள் அக்கரை சோழிங்கநல்லூர் வழியாக ஓ.எம்.ஆர் சாலையில் சென்றது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை சுமார் 5மணி நேரம் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சைக்கிள் மெக்கானிக், மருத்துவ பிரிவினர் பின் தொடர்ந்தனர்
சைக்கிள் வீரர்கள் செல்லும் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வீரர்கள் சென்ற சைக்கிள்களின் பின்னால் சைக்கிள் மெக்கானிக், மருத்துவ பிரிவினர் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்றனர். நிர்ணயிக்கப்பட்ட 3 திருப்பங்களிலும் டிஜிட்டல் டயர் பதிவு கருவிகள் வைத்து துல்லியமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு அரசு வேலை
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாதரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.