Home செய்திகள் சூறாவளிக் காற்று : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு 

சூறாவளிக் காற்று : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு 

0
சூறாவளிக் காற்று : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு 
the regional meterological dept

சூறாவளிக் காற்று : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Cyclone : ​​Chance of heavy rain in Tamil Nadu

  • குமரிக்கடல் மற்றும் தமிழகப் பகுதிகளின் மேல் ஒருவளிமண்டல கீழடுக்கு சுழற்சி

  • இன்று மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல தடை

சென்னை, அக். 01

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்றுமுதல் அக்.6-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குமரிக்கடல் மற்றும் தமிழகப் பகுதிகளின் மேல் ஒருவளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6-ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு,கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், நாளை மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 9 செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தலா 8 செமீ, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, மணியாச்சி ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.