Wednesday, December 18, 2024

சிலிண்டர் விலை உயர்வு : வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50, வணிக சிலிண்டர் ரூ.350.50

  • சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50ம், வணிக சிலிண்டர் விலை ரூ.350.50ம் அதிகரிக்கப்படுள்ளது.

  • விநியோக ஊழியர்களுக்கான டிப்ஸ்ஸையும் சேர்த்தால் வீட்டு மாத பட்ஜெட்டில் சிலிண்டருக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக இல்லத்தரசிகள் வேதனை

 

சென்னை, மார்ச். 01

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50ம், வணிக சிலிண்டர் விலை ரூ.350.50ம் அதிகரிக்கப்படுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் மார்ச் 1 ஆம் தேதியான இன்று வீட்டு உபயோக சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இனி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1118.50 காசுகள்.

இதையும் படியுங்கள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் : பிரதமர் மோடி , ஆளுநர் ரவி வாழ்த்து

அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.350.50 உயர்ந்துள்ளது. ஆட்டோக்களுக்கான எல்பிஜி விலையும் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த ஜூலை 2022ல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விலை இன்றே அமலுக்கு வந்தது. புதிய விலைப்பட்டியலின் படி டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1103, வணிக சிலிண்டர் விலை ரூ.2119.50 என்றளவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக சாமான்ய மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விநியோக ஊழியர்களுக்கான டிப்ஸ்ஸையும் சேர்த்தால் வீட்டு மாத பட்ஜெட்டில் சிலிண்டருக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

 

 

 

 

 

 

 

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles