*அமீன் மேல் நிலைப்பள்ளியின் புத்தக வாசிப்பு இயக்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தலைப்புகளில் 200 புத்தகங்களை புத்தகங்களை வழங்கி உள்ளார்
* “நீங்களும் ஒர் IPS அதிகாரி ஆகலாம்”, சாதிக்க ஆசைப்படு” உள்பட 23 புத்தகங்களை தமிழ்நாடு காவல்துறை தலைவர் முனைவர் சைலேந்திரபாபு அனுப்பி உள்ளார்
மதுரை, மார்ச். 01
மதுரை கே.புதூர் அல் அமீன் மேல் நிலை பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு வசதியாக புத்தக வாசிப்பு இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தை செம்மை படுத்த, பள்ளியின் முதல்வர் ஷேக் நபி பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். இதை தொடர்ந்து அல் அமீன் மேல் நிலைப்பள்ளியின் புத்தக வாசிப்பு இயக்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் வாசிப்பு திறனையும், சிந்தனை திறனையும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் 200 புத்தகங்களை புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தார்.
இதையும் படியுங்கள் :
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி : 110 ரன் இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங்
இந்த நிலையில் தமிழ்நாடு காவல் துறை தலைவர் முனைவர் சைலேந்திரபாபு, அல் அமீன் பள்ளியின், புத்தக வாசிப்பு இயக்கத்துக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவு சார்ந்த புத்தகங்களை அனுப்பி வைத்துயுள்ளார். “நீங்களும் ஒர் IPS அதிகாரி ஆகலாம்”, சாதிக்க ஆசைப்படு” உள்பட அவர் எழுதிய 10 புத்தகங்கள் மற்றும் பிற நூல் ஆசிரியர்கள் எழுதிய 13 புத்தகங்கள் என மொத்தம் 23 புத்தகங்களை பார்சல் மூலம் அனுப்பியுள்ளார்.
அதில் சைலேந்திரபாபு எழுதிய புத்தகங்களில் விழிப்புணர்வு வாசகங்களோடு, தமது கையொப்பத்தை இட்டு வாழ்த்தியுள்ளார்.
இந்த புத்தகங்களை பள்ளியில் ஓப்படைக்கும் நிகழ்வும், மாணவர்களுக்கு புத்தகங்களை அனுப்பி வைத்த தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் பள்ளியில் இன்று நடைபெற்றது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.