தீபாவளி : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை
Diwali: Tamil Nadu government warns of action if higher fares are charged in Omni buses
-
பேருந்துகளை தொடர்ந்து நடத்துகின்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை
-
அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளையும் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்க நடவடிக்கை
சென்னை, அக். 25
தீபாவளி : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை:
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி முன்னிட்டு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதையும் படியுங்கள் : உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: முனைவர் ஆரோக்கியராஜ், பேரா.சந்திரசேகரன், பேரா.பாலமுரளிகிருஷ்ணனுக்கு இடம்
அப்போது அவர் கூறியதாவது:- பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேருந்துகளை தொடர்ந்து நடத்துகின்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை.
தனியார் செயலிகள் மூலமாகவும், புதிதாக பேருந்து இயக்குபவர்களும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்கள் மீதான புகார்கள் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு தரப்பில் கட்டணமில்லா எண் வெளியிடப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கான பணிமனை கட்டுமான வேலை இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. விரைவில் முடிவடையும். அதுவரை, ஆம்னி பேருந்துகள் அவர்களின் சொந்த பணிமனையில் இருந்து இயக்குவார்கள். அந்த பேருந்துகள் 400 அடி புறவழிச்சாலை வழியாக செல்லும். அரசுக்கு சில கடமைகள் இருக்கிறது. பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுக்கும் கடமை. அரசு கூடுதலாக எத்தனை பேருந்துகள் இயக்குகிறது என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.
அந்த கூடுதல் பேருந்துகளில் அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளையும் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயலிகளையும் அரசு கண்காணிக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய இடத்தில்தான் இந்த துறை இருக்கிறது. செயலிகளில் குறிப்பிட்ட பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.