Thursday, December 19, 2024

இந்திய மீனவர்களையும், மீன்பிடி கப்பலையும் உடனடியாக விடுவிக்க தி.மு.க எம். பி. க. செல்வம் பாராளுமன்றத்தில்  கோரிக்கை 

இந்திய மீனவர்களையும், மீன்பிடி கப்பலையும் உடனடியாக விடுவிக்க தி.மு.க எம். பி. க. செல்வம் பாராளுமன்றத்தில்  கோரிக்கை 

dmk k.selvam request in parliament to release indian fishermen and boats immediately 

  • மார்ச் 12 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்களை விடு விக்ககோரி, தமிழக முதலமைச்சர் மார்ச் 13 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • அனைத்து இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி கப்பலையும் உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்

காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க எம். பி. க. செல்வம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

பிரதமருக்கு கடிதம்

மார்ச் 12 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்களை விடு விக்ககோரி, தமிழக முதலமைச்சர் மார்ச் 13 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது ஒரு மாதத்திற்குள் மூன்றாவது சம்பவமாகும். மேலும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கிறது. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் மனதில் அச்ச மனநோயை உருவாக்குகிறது.

fishermen
fishermen

நாடு திரும்பவில்லை

102 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், 6 படகுகள் ஐ.எம்.பி. எல்லை தாண்டியதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையால் விடுவிக்கப்பட்டவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை.

இதையும் படியுங்கள் : அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கைது

முன்னதாக, தமிழகத்தின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் (தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) அவர்களது இயந்திரப் படகுகளுடன் பிரித்தானியரின் டியாகோ கார்சியாவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பேச்சு வார்த்தை

எனவே, அனைத்து இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி கப்பலையும் உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு தி.மு.க எம். பி. க. செல்வம் பேசினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

 

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles