Home செய்திகள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி மீது நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல்

 சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி மீது நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல்

0
 சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி மீது நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி மீது நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல்

Edappadi Palaniswami files petition on Udayanidhi in Madras High Court seeking compensation

  • மக்கள் பிரச்சினையை திசைத் திருப்பவே உதயநிதி சனாதனம் குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

  • தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு நஷ்டஈடாக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனுவில் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்.11

சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி மீது நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் : தன்னை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் ரூ 1.10 கோடி நஷ்டஈடாக தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார்.

சனாதன ஒழிப்பு மாநாடு

செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என போடாமல் ஒழிப்பு மாநாடு என போட்டுள்ளீர்கள்.

எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும்

எனக்கு இந்த தலைப்பே மிகவும் பிடித்துவிட்டது. சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும் என உதயநிதி பேசியிருந்தார்.

இதையும் படியுங்கள் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இதற்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் உதயநிதியின் தலையை சீவினால் ரூ 10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் தெரிவித்திருந்தார். மக்கள் பிரச்சினையை திசைத் திருப்பவே உதயநிதி சனாதனம் குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிய முடியாது

உதயநிதியின் தலை சீவ சொன்ன சாமியாரின் உருவபொம்மை எரிப்பு தமிழகத்தில் நடந்தது. அத்துடன் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உதயநிதி தனது அறிக்கையில் ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல்

ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் உதயநிதியின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு நஷ்டஈடாக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வழக்குப் பட்டியலிடப்படும் என தெரிகிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.