
தூத்துக்குடியில் ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலை : முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
Electric car manufacturing plant around Rs. 16,000 crore In Thoothukudi: Chief Minister Stalin inaugurated
-
தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 400 ஏக்கர் நிலபரப்பில் மின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்டு ஒன்றுக்கு 1½ லட்சம் மின் வாகனங்கள் தயாரிக்க முடிவு
-
வின் பாஸ்ட் மின் கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தின் நுழைவுவாயில். ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த தொழிற்சாலையில் முதற்கட்டமாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி, பிப். 25
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள சிப்காட் பகுதிகளில் தொழில் வளங்களை பெருக்கி அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார்.
சிப்காட் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள்
நெல்லை, தூத்துக்குடி சிப்காட் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பில் தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையும் படியுங்கள் : வருகிறது ஆபத்து ! கூகுள் பே ஆப் தடை
முதல் மின் வாகன தொழிற்சாலை
அந்த வகையில் தென் மாநிலத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் முதல் மின் வாகன தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தை வியட்நாமை சேர்ந்த பிரபல நிறுவனமான வின் பாஸ்ட் தொடங்க உள்ளது. இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 400 ஏக்கர் நிலபரப்பில் மின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்டு ஒன்றுக்கு 1½ லட்சம் மின் வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின் பாஸ்ட் மின் கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தின் நுழைவுவாயில். ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த தொழிற்சாலையில் முதற்கட்டமாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த புதிய மின் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி சில்லா நத்தத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு புதிய கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்