
-
பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை’ எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலினின் எழுபது ஆண்டு கால பயணம் குறித்தான புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச்.11
சென்னை, பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை’ எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலினின் எழுபது ஆண்டு கால பயணம் குறித்தான புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகர்கள் ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் இன்று பார்வையிட்டனர். புகைப்படம் உணர்த்தும் வரலாற்றை ரஜினியிடம் அமைச்சர் சேகர்பாபு எடுத்துரைத்தார்.
இதையும் படியுங்கள் : தமிழகத்தில் ஏப். 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார். புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் தனது கருத்தை எழுத்து மூலம் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.