Home தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 4-வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 4-வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 4-வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

  • இதையடுத்து 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு, மார்ச்.02

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்குமா பாஜக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில் 30 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. நோட்டாவிற்கு 23 வாக்குகள் பதிவாகி உள்ளது. 3 சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

இதையடுத்து 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.