Home செய்திகள் எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

0
எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
chief minister mk stalin

எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Everything for everyone is the Dravidian model – Chief Minister M.K.Stalin’s speech

  • ஓய்வின்றி என் சக்திக்கும் மீறி பணியாற்றி வருகிறேன்.

  • திராவிட மாடல் என்றால் என்ன என கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை

சென்னை, மே .06

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சியில், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் உயர்கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேடயங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்… மறக்க முடியாத குரல் இது. இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் முதல்-அமைச்சர் பொறுப்பில், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்ல முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்.

மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? என என்னை நானே கேட்டுக்கொண்டபோது, என் மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி தான்.

முதல்-அமைச்சர்

மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதிதல்ல. சிறுவனாக இருந்துபோதே திராவிட இயக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன். தமிழகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதல்-அமைச்சர். அவர்களுக்காக ஓய்வின்றி என் சக்திக்கும் மீறி பணியாற்றி வருகிறேன்.

மக்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் கை தூக்கி விடும் அரசு தான் திமுக அரசு. அனைவருக்குமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்படுவது திமுக அரசு.

இதையும் படியுங்கள் : “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 1.20 லட்சம் மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

திராவிட மாடல்

திராவிட மாடல் என்றால் என்ன என கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. மக்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி தான் பதில். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல். சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது.

மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் என்றால் தெரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியிலிருப்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம் கடமையை செய்தால் போதும் என்ற குறிக்கோளுடன் நான் செயல்படுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்