
- மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- இன்றைய தினம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்
சென்னை, மார்ச். 20
உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேசானா கொரோனா தொற்றினால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
38 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை தனியார் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது.
ஈவிகேஎஸ் இளங்கோவனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது சீராக உள்ளது. மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.