Wednesday, December 18, 2024

மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15 தேதி வரை ரத்து

 

  • திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம், மதுரை-திண்டுக்கல், நெல்லை-ஜாம் நகர், நெல்லை-காந்திதாம், நெல்லை-தாதர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ந் தேதி வரை ரத்து

  • தேனியில் இருந்து தினந்தோறும் இரவு 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் வருகிற 14-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக 6.45 மணிக்கு புறப்பட்டு வரும்.

மதுரை, பிப் .09

மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் ரெயில்கள் போக்குவரத்தில் வருகிற 15-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம், மதுரை-திண்டுக்கல், நெல்லை-ஜாம் நகர், நெல்லை-காந்திதாம், நெல்லை-தாதர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தேனியில் இருந்து இரவு 6.15 மணிக்கு புறப்பட்டு வரும் மதுரை பயணிகள் ரெயில், 15-ந் தேதி ரத்து செய்யப்படும். மதுரை-திருவனந்தபுரம் (அமிர்தா), மதுரை-கோவை, மதுரை-விழுப்புரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும்.

நாகர்கோவில்-கோவை, மதுரை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் விருதுநகரில் இருந்து இயக்கப்படும். மதுரை-எழும்பூர் (தேஜாஸ்) எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் வியாழன் தவிர மற்ற நாட்களில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்.

மதுரை-பிகானீர் எக்ஸ்பிரஸ் இன்று (9-ந் தேதி) கூடல்நகரில் இருந்து புறப்படும். கச்சிகுடா-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி திண்டுக்கல் வரை இயக்கப்படும். மதுரையில் இருந்து 12-ந் தேதி புறப்பட வேண்டிய கச்சிகுடா எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும்.

இதையும் படியுங்கள்ஆந்திராவில் விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு

மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு வரை இயக்கப்படும். பனாரஸ்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் வருகிற 12-ந் தேதி விழுப்புரம் வரை இயக்கப்படும். ராமேசுவரத்தில் இருந்து வருகிற 15-ந் தேதி புறப்பட வேண்டிய பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.

செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும். குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும்.

தேனியில் இருந்து தினந்தோறும் இரவு 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் வருகிற 14-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக 6.45 மணிக்கு புறப்பட்டு வரும். திருச்சியில் இருந்து வரும் பயணிகள் ரெயில், வருகிற 15-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக மானாமதுரைக்கு வரும்.

இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles