
அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
FACEMASK IS MUST IN GOVERNMENT HOSPITALS – MINISTER M. SUBRAMANIAN
சென்னை, மார்ச்.31
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று 3 ஆயிரத்து 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்று 123 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் குறைவாக இருந்தாலும் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திட தீவிர கவனம் செலுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதையும் படியுங்கள் : 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் –அமைச்சர் கே.என்.நேரு
நாளை முதல் முகக்கவசம்
பொதுவாக எந்த நோய் தொற்றாக இருந்தாலும் பெரும்பாலும் மருத்துவமனைகளில் இருந்தே பரவும். எனவே தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளிலும் நாளை முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கட்டாயம் முகக்கவசம்
ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகள், உள் நோயாளிகள் மருத்துவமனையின் அனைத்து நிலை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.
இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.