Home கல்வி / கலை காய்ச்சல் வேகமாக பரவுவதால் பள்ளிக்கு பத்து நாள் விடுமுறை

காய்ச்சல் வேகமாக பரவுவதால் பள்ளிக்கு பத்து நாள் விடுமுறை

0
காய்ச்சல் வேகமாக பரவுவதால் பள்ளிக்கு பத்து நாள் விடுமுறை
puducherry
  • அரசு ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதி இல்லாததால் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்கிறார்கள்.

  • புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை 10 நாட்கள் விடுமுறை

புதுச்சேரி, மார்ச் 15

புதுவையில் புதிய வைரஸ் பரவல் காரணமாக, தற்போது நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதி இல்லாததால் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்கிறார்கள்.

இந்த புதிய வைரஸ் பரவலால் மாணவ, மாணவிகள் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று நேரு எம்.எல்.ஏ. சட்டசபையில் வலியுறுத்தி இருந்தார்.

இதையும் படியுங்கள் : 15 இன்ஜினியரிங் கல்லூரி தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் தொற்று பரவி வருவதால் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை சட்டசபையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.