Home செய்திகள் கேரளாவில் நிதி மோசடி : கையும் களவுமாக சிக்கினார் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மனைவி

கேரளாவில் நிதி மோசடி : கையும் களவுமாக சிக்கினார் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மனைவி

0
கேரளாவில் நிதி மோசடி : கையும் களவுமாக சிக்கினார் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மனைவி

கேரளாவில் நிதி மோசடி : கையும் களவுமாக சிக்கினார் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மனைவி

Financial fraud in Kerala: Anti-bribery DSP’s wife caught red-handed

  • நஸ்ரத்திடம் பணம் மற்றும் நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள், இது தொடர்பாக மலப்புரம் போலீசில் புகார்

  • நஸ்ரத், திருச்சூரில் உள்ள செர்புவில், கணவர் சுரேஷ்பாபுவின் வீட்டில் பதுங்கல்

திருவனந்தபுரம், மே. 30

கேரளாவின் திருச்சூர் கூட்டுறவு துறையின் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் பாபு. சுரேஷ் பாபுவின் மனைவி நஸ்ரத். கணவர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.யாக இருப்பதால் அரசாங்கத்தில் பலரை தெரியும் என அந்த பகுதி மக்களிடம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேச தலைவர்கள் காந்தி ,நேரு,படேல் படங்களை புறக்கணித்து சாவர்கர் படத்தை திறப்பதா ? – ஆர்எஸ்எஸ் – பாஜக அரசுக்கு விஞ்ஞானி பொன்ராஜ் கண்டனம்

தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்தார். இதனை நம்பி பலர், அவரிடம் பணம் கொடுத்தனர். அவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி வந்த நஸ்ரத், பணம் வாங்கி பல நாட்கள் ஆனபின்பும் கூறியபடி வேலை வாங்கி கொடுக்க வில்லை.

நஸ்ரத் மீது 9 வழக்குகள் பதிவு

இது போல சிலரிடம் தங்க நகைகளையும் வாங்கி ஏமாற்றி உள்ளார். நஸ்ரத்திடம் பணம் மற்றும் நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள், இது தொடர்பாக மலப்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நஸ்ரத் மீது 9 வழக்குகள் பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

நஸ்ரத் கைது

இந்த நிலையில் நஸ்ரத், திருச்சூரில் உள்ள செர்புவில், கணவர் சுரேஷ்பாபுவின் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், நஸ்ரத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.