
குடியுரிமை பெறுவதற்கு முன்பே குடும்பதினரை அழைத்து வரலாம் – கனடா அரசு அனுமதி
foreigner living in canada can get family visa
-
வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை
-
கணவன் அல்லது மனைவி கனடாவுக்கு அழைத்து வர விரைவான temporary resident visa (TRV) பிராசசிங் முறை
டொராண்டோ, மே .27
இந்தியர்கள் கடந்த 5 வருடமாக வெளிநாட்டுக்கு அதிகளவில் படையெடுத்து வருகிறன்றனர், பெரும் பணக்காரர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வரும் வேளையில் சாமானிய மக்கள் வேலைவாய்ப்பு, படிப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வெளிநாட்டில் செட்டிலாகும் முடிவுக்கு வருகின்றனர்.
விசா மற்றும் வொர்க் பர்மிட்
ஒரு பக்கம் இந்தியாவில் அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக சந்தை ஆய்வுகள் கூறினாலும், வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை
இந்த நிலையில் பல இந்தியர்களின் கனவு நாடாக இருக்கும் கனடா நாட்டின் அரசு முக்கியமான விசா மற்றும் வொர்க் பர்மிட் முறையை கொண்டு வந்துள்ளது.
வெளிநாட்டவர்கள் நிரந்தர குடியுரிமை
கனடா நாட்டின் Immigration, Refugees and Citizenship துறை அமைச்சரான சீன் ஃப்ரேசர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனடா நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்கள் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்திற்கும் வேளையில், இவர்களின் விண்ணப்பம் உறுதி பெற காத்திருப்பு காலத்திலேயே அவர்களின் குடும்பத்தை கனடாவுக்கு அழைத்து வர விரைவான விசா முறை கொண்டு வரப்பட்டு உள்ளது என அறிவித்தார்.
temporary resident visa (TRV) பிராசசிங் முறை
இப்புதிய திட்டத்தின் கீழ் கனடா நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்கள் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்திற்கும் வேளையில், அவரின் கணவன் அல்லது மனைவி கனடாவுக்கு அழைத்து வர விரைவான temporary resident visa (TRV) பிராசசிங் முறையை கொண்டு வந்துள்ளது. இதற்காக தனிப்பட்ட பிராசசிங் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஒப்பன் வொர்க் பர்மிட்
இதே போல் spousal மற்றும் family class விண்ணப்பதாரர்களுக்கு புதிய ஒப்பன் வொர்க் பர்மிட் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் கனடா நாட்டில் இருக்கும் மிகப்பெரிய ஊழியர்கள் தட்டுப்பாட்டை விரைவாக தீர்க்க முடியும் என கனடா அரசு நம்புகிறது.
இதனால் கனடா நாடுக்கு செல்ல இருக்கும் இந்தியர்கள் விரைவாக குடும்பத்தை அந்நாட்டுக்கு அழைப்பது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு வேலைவாய்ப்பு செய்யும் உரிமையை பெற முடியும். இது குடும்பமாக புதிய நாட்டுக்கு செல்வோருக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.