
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
Former Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu remanded to 14-day court custody
-
ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.
-
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விஜயவாடா, செப். 11
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

அதிகாலை வரை விசாரணை
சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படியுங்கள் : ஜி-20 உச்சி மாநாடு நிறைவு |பிரேசிலில் அடுத்த மாநாடு
மருத்துவ பரிசோதனை
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பிறகு நாள் முழுவதும் வாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
14 நாள் நீதிமன்ற காவல்
இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.