முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது – மத்திய அரசு அறிவிப்பு
Former Prime Ministers Saransingh, Narasimha Rao, Agronomist MS Swaminathan to receive Bharat Ratna Award – Central Government Notification
-
அவரது தொலைநோக்கு திறமையால் இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அவர் அமைத்தார். அவர் பிரதமராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி புதிய சகாப்தத்தை எட்டியது.
-
சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, பிப். 09
முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறந்த அறிஞராகவும் அரசியல்வாதியாகவும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தார். அவரது தொலைநோக்கு திறமையால் இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அவர் அமைத்தார். அவர் பிரதமராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி புதிய சகாப்தத்தை எட்டியது.
இதையும் படியுங்கள் : தமிழக மக்களுக்கு உதவுபவர்க்கே மத்தியில் ஆதரவு – அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
முன்னாள் பிரதமர் சரண்சிங்
முன்னாள் பிரதமர் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்குவது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலன்களுக்காக அர்ப்பணித்தவர்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
மேலும், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்