Home செய்திகள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்| முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்| முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

0
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்| முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
free-eb-connection-for-50000-farmers

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்| முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

free-eb-connection-for-50000-farmers

திருச்சி, ஜூலை 27

திருச்சிக்கு 2-நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வருகை தந்தார். பின்னர் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு அந்த போரில் வீர மரணம் அடைந்த திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனின் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

டெல்டா மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்

பின்னர் திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மைதானத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட டெல்டா மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து இன்று காலை (வியாழக்கிழமை) திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 நாள் வேளாண் சங்கமம் – 2023 நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்றார்.

இங்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்

அதன் பின்னர் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார். மேலும் இந்த விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கினார். இந்த வேளாண் கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், பசுமை குடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன எந்திரங்கள், டிரோன்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : முதுநிலை மருத்துவ படிப்பு இன்று முதல் சுற்று கலந்தாய்வு

வேளாண்துறை திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

வேளாண்மையில் தற்போது புகுத்தப்பட்டுள்ள புதிய நவீன தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், விவசாயிகள் – விஞ்ஞானிகள் கலந்துரையாடல், செயல் விளக்கங்கள் மற்றும் வேளாண்துறை திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

50000 free eb connections for farmers
50000 free eb connections for farmers

கண்காட்சியில் இடம் பெற்றிருந்த அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பலா மர கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள், நுண்ணூட்ட கலவைகள், திரவ உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விவசாயிகளை பெரிதும் கவர்ந்தது.

உழவன் செயலி பதிவிறக்கம்

மேலும் தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த கண்காட்சியில் உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப்பதிவுகள், மண் வள அட்டை வழங்கும் சேவைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய தொழில்நுட்பங்கள், மின்னணு விற்பனை, வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில்நுட்பம், வேளாண் எந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

50000 farmers in the exhibition meeting
50000 farmers in the exhibition meeting

வேளாண் கண்காட்சி

இந்த வேளாண் கண்காட்சி, கருத்தரங்கில் 3 நாட்களும் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு இந்த வேளாண் கண்காட்சி பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.