ஜி 20 : சென்னையில் நிதி கட்டமைப்பு மாநாடு
g20 : financial frame work conference in chennai
-
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் கல்வி சம்பந்தமான மாநாடு நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் சென்னையில் நிதி கட்டமைப்பு தொடர்பான மாநாடு நடக்கிறது.
-
மாநாட்டுக்கு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் இங்கிலாந்து நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
சென்னை, மார்ச். 24
2023- ஆம் ஆண்டுக்கான ஜி 20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்று உள்ளது.
இந்த கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, கனடா, ரஷியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரேசில், அர்ஜெண்டினா, இந்தோனேஷியா, தென்கொரியா,மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன.
பல்வேறு தலைப்புகளில் விவாதம்
உலகின் மிகச்சக்தி வாய்ந்த கூட்டமைப்பாக இருக்கும் ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு , பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு உள்பட பல்வேறு தலைப்புகளில் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் கடந்த ஜனவரி மாதம் கல்வி சம்பந்தமான மாநாடு நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் சென்னையில் நிதி கட்டமைப்பு தொடர்பான மாநாடு நடக்கிறது.
நிதி கட்டமைப்பு 2- வது மாநாடு
இதற்கு முன்பு இது தொடர்பான மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்தது. நிதி கட்டமைப்பு தொடர்பான 2- வது மாநாடு இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள சோழா ஓட்டலில் தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியா உள்பட ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : பிறை தெரிந்ததை தொடர்ந்து, இன்று முதல் ரமலான் நோன்பு
இந்த மாநாட்டுக்கு மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் இங்கிலாந்து நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாநாடு தொடரும்
இதில் 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கபட்டது. நாளையும் தொடர்ந்து இந்த மாநாடு நடக்கிறது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.