
இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து | கமல்நாத் அறிவிப்பு
General meeting of India alliance cancelled | Kamal Nath announcement
-
போபாலில் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி அன்று இந்தியா கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
-
பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
போபால், செப். 16
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் கொடுத்த விஜய் தேவரகொண்டா

மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி அன்று இந்தியா கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுக் கூட்டம் ரத்து
இந்நிலையில், அக்டோபர் மாதம் 2ம் தேதி நடைபெற இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.