Home News ஜெர்மனி விமான நிலையங்களில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் – 3 லட்சம் பயணிகள் அவதி

ஜெர்மனி விமான நிலையங்களில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் – 3 லட்சம் பயணிகள் அவதி

0
ஜெர்மனி விமான நிலையங்களில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் – 3 லட்சம் பயணிகள் அவதி
  • ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

  • பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

பிராங்க்பர்ட், பிப். 18

ஜெர்மனிக்கு ஆயிரக்கணக்கான விமானங்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. ஜெர்மன் வழியாகவும் பல விமானங்கள் செல்கின்றன. இந்நிலையில் 7 விமான நிலையங்களின் பணியாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர் .

ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

இதனால் சுமார் 2300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

ஜெர்மனி வழியாக செல்லும் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர். விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.