Thursday, December 19, 2024

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

Governor approves bill to ban online gambling

  • 2-வது முறையாக அனுப்பப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது

  • தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்கு  5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை

சென்னை, ஏப்.10

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். சில விளக்கங்களையும் கேட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு வேண்டும் ;சட்ட பேரவையில் தீர்மானம்

இதையடுத்து ஆளுநர் கேட்ட விளக்கங்களுடன் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2-வது முறையாக அனுப்பப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு சற்றுமுன் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்கு  5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டுமே  தண்டனையாக விதிக்க தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles