Home தமிழகம் ஜெ. கொலை வழக்கு: விஜய பாஸ்கர் மீது இடைக்கால தடை விதிக்க முடியாது- உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜெ. கொலை வழக்கு: விஜய பாஸ்கர் மீது இடைக்கால தடை விதிக்க முடியாது- உயர்நீதிமன்றம் மறுப்பு

0
ஜெ.  கொலை வழக்கு: விஜய பாஸ்கர் மீது இடைக்கால தடை விதிக்க முடியாது- உயர்நீதிமன்றம்  மறுப்பு
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022 ஆகஸ்ட் 23-ந் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவ்விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் உள்ளது.

  •  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஆனால் தனிநபர் குற்றச்சாட்டு வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைப்பு

மதுரை, மார்ச்.01

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தேர்தல் மூலமாக நான் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2013 முதல் 2021-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். பொதுமக்கள் இடையே எனக்கு நற்பெயர் உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022 ஆகஸ்ட் 23-ந் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவ்விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் உள்ளது.

சாட்சியாக என்னை விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளுக்கும், அதனை யாரும் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் அறிக்கையில் எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த குறிப்புகள் வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீது சட்ட நடவடிக்கை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையானது சட்டசபையில் விவாதிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என்று வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “கட்டுமானத்துறையை சீரமைத்து செம்மைபடுத்திய தலைமகனே வாழ்க” – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பெய்ரா தலைவர் ஹென்றி பிறந்தநாள் வாழ்த்து

இதனையடுத்து அத்வானி மற்றும் உச்சநீதிமன்ற பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டிய நீதிபதி இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார். விசாரணைக்காக அழைத்து மனுதாரர் மீது குற்றம் சாட்டுவது எப்படி? என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார்.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஆனால் தனிநபர் குற்றச்சாட்டு வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.