Home செய்திகள் முழு நிலவு ஒளியில் வரலாற்று நாவல் “காவல் கோட்டத்தின் கதை”

முழு நிலவு ஒளியில் வரலாற்று நாவல் “காவல் கோட்டத்தின் கதை”

0
முழு நிலவு ஒளியில் வரலாற்று நாவல் “காவல் கோட்டத்தின் கதை”
சு.கிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்தார் தலைமை ஆசிரியர் ஷேக் நபி

 

முழு நிலவு ஒளியில் வரலாற்று நாவல் “காவல் கோட்டத்தின் கதை”

HISTORICAL NOVEL  KAAVAL KOTTATHIN KATHAI IN MOON LIGHT

  • காவல் கோட்டம், 2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான (நாவல்) சாகித்திய அகாதெமி விருது

  • மதுரை வாசகர் வட்டம் பொதுமக்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கவும், இலக்கியப் பணிக்காகவும் மாதாமாதம் ”நூல் மதிப்புரைக் கூட்டம்

மதுரை, ஏப். 07
தமிழுக்கும் , தமிழருக்கும்  பெருமை சேர்க்கும் புராணங்களிலும் ,வரலாற்றிலும் தனக்கென தனி பெருமை சேர்ந்திடும் மாநகராம் மதுரையில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை .நமது மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்திருக்கும் அல் அமீன் மேல் நிலை பள்ளியில்  வித விதமான விழாக்களுக்கு பஞ்சமில்லை.
தமிழ் பற்று, தேச பற்று, சமூக பற்று சேர்ந்த கலவையானவர் அல் அமீன் மேல் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு .ஷேக் நபி. பள்ளி பிள்ளைகள்  மட்டுமின்றி பெரியவர்களின் வாசிப்பு திறனையும் ஊக்கு விக்கும் விதமாக அமைந்தது தான்  இந்த மதுரை வாசகர் வட்டம்.
காவல் கோட்டம், 2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான (நாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினமாகும். 19ம்  நூற்றாண்டின் இறுதியிலும் 20ம்  நூற்றாண்டின் தொடக்கத்தில்  நடக்கும்
வரலாறாக சொல்லப்படுகிறது. தமிழன்னை பிரசவித்த எண்ணற்ற

சேய்களுள் இந்த காவல் கோட்டத்தின் கதை” சிறந்தவைகளுள்  ஒன்று .

மதுரை வாசகர் வட்டம் பொதுமக்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கவும், இலக்கியப் பணிக்காகவும் மாதாமாதம் ”நூல் மதிப்புரைக் கூட்டம்” நடத்தி வருகிறது. இம்மாதம் சிறப்பு நிகழ்வாக ”கதை சொல்லும் நிகழ்வு” முழு நிலவு ஒளியில் – அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திரு.சு.வெங்கடேசன், M.P. எழுதிய, சாகித்திய அகாடமி விருது பெற்ற முழு நீள வரலாற்று நாவல் ”காவல் கோட்டத்தின் கதை” – நூலை முனைவர் சு.கிருஷ்ணன் கதை சொல்லும் பாணியில் உரையாற்றினார்.
கதை சொல்லி, கதை கேட்கும் பாணியில் உரையாடல் அமைந்ததால், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. விறுவிறுப்பாக காட்சிகள் நம் கண் முன்னே தோன்றியது போல் அமைந்தது பாராட்டுக்குரியது.
90 எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்