Home கல்வி / கலை பதவி உயர்வு வழங்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்ட்டம்

பதவி உயர்வு வழங்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்ட்டம்

0
பதவி உயர்வு வழங்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்ட்டம்
directorate of school education

பதவி உயர்வு வழங்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்ட்டம்

hunger strike by graduation teachers for promotion

  • பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாக வைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்

  • ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கிலும் பதவி உயர்வு வழங்க உத்தரவு

சென்னை, மே. 29

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

போராட்டம்

செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். போராட்டம் பற்றி செயலாளர் சுந்தரபாண்டியன் கூறியதாவது:- கடந்த 18 ஆண்டுகளாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறோம்.

இதையும் படியுங்கள்தமிழகத்தை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – ஜப்பானில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

எங்களுக்கு பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாக வைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் பதவி உயர்வு வழங்கவில்லை.

எனவே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம். இவ்வாறு செயலாளர் சுந்தரபாண்டியன் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.