
தமிழகத்தில் ஐ. ஏ. எஸ் அதிகாரிகள் மாற்றம் ; ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சி துறை செயலாளர்
I. A. S Officers Change in Tamil Nadu ; Gagandeep Singh Bedi Secretary of Rural Development Department
சென்னை, ஜூலை. 01
தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர்.
* அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
* நீர்வளத்துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா செய்தி மற்றும் காகித துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த சந்திரமோகன், தற்போது சுற்றுலாத்துறை செயலாளராக நியமனம்.
* புதிய பொதுப்பணித் துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* நெடுஞ்சாலைத் துறை செயலாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழக அரசின் கேபிள் டிவி இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ், தற்போது தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான இயக்குநராக நியமனம்.
* விஜயலட்சுமி ஐஏஎஸ், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* வெங்கடாசலாம் ஐஏஎஸ், தமிழக அரசின் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : வணிக எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு
* ஹரிஹரன் ஐஏஎஸ், நில சீர்த்திருத்த துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* லில்லி ஐஏஎஸ், போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சாய் குமார் ஐஏஎஸ், தமிழக தொழில் முதலீட்டு துறை செயலாளராக நியமனம்.
* வைத்தியநாதன் ஐஏஎஸ், தமிழ்நாடு கேபிள் டிவியின் இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
* ஜவஹர் ஐஏஎஸ், சமூக சீர்த்திருத்த துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்