Home News நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

0
நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
  • மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், மோகன்லாலிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது

  •  நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி இருப்பது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கொச்சி, பிப்.18

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்வி ராஜ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது.இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதா? என்ற தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது வெளியிட வில்லை.

இந்த நிலையில் நேற்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், மோகன்லாலிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

இதையும் படியுங்கள்அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இஷ்டத்திற்கு விடுப்பு எடுக்க தடை – கல்வித்துறை உத்தரவு

விசாரணை விபரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் கேரளாவில் ஏற்கனவே சோதனை நடத்திய மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார்.

மோகன்லால் நடித்த லூசிபர், திரிஷ்யம், புலி முருகன் போன்ற படங்களை இவர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி இருப்பது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.