- 64 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது.
நாக்பூர், பிப். 09
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
இதையும் படியுங்கள் : இந்தியா, பாகிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பெரிய நிலநடுக்கம்
64 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது.
ரோகித் 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.