Home செய்திகள் நாடு முழுவதும் 53 முக்கிய வழித்தடங்களில் ரெயில்வேகம் அதிகரிக்கப்படும் – ரெயில்வே அமைச்சகம்

நாடு முழுவதும் 53 முக்கிய வழித்தடங்களில் ரெயில்வேகம் அதிகரிக்கப்படும் – ரெயில்வே அமைச்சகம்

0
நாடு முழுவதும் 53 முக்கிய வழித்தடங்களில் ரெயில்வேகம் அதிகரிக்கப்படும் – ரெயில்வே அமைச்சகம்
railway department

நாடு முழுவதும் 53 முக்கிய வழித்தடங்களில் ரெயில்வேகம் அதிகரிக்கப்படும் – ரெயில்வே அமைச்சகம்

Indian Railways has decided to raise the sectional speed of 53 important broad-gauge routes across the country to 130 kmph.

  • 130 கி.மீ. வேகத்தை ரெயில்கள் எட்டுவதற்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

  • சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை, மே. 01

இந்தியா முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ. ஆக அதிகரிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த 53 வழித் தடங்களிலும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

130 கி.மீ. வேகத்தில் இயக்கம் 

சென்னை எழும்பூர்-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு போன்ற வழித் தடங்களும் இதில் அடங்கும். இதையசென்னை-மதுரை ரெயில் இனி 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாகடுத்து  குறையும். மேலும் ரெயில்களின் செயல் திறனும் மேம்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள் : 12 மணி நேரம் வேலை மசோதா வாபஸ் -முதலமை ச்சர் மு .க ஸ்டாலின்

130 கி.மீ. வேகத்தை ரெயில்கள் எட்டுவதற்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரக்கோணம்-மைசூர், ஜோலார்பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர், கண்ணூர்-கோழிக்கோடு, திருவனந்தபுரம்-மதுரை, ஜோலார்பேட்டை, கோவை ஆகிய வழித் தடங்களிலும் வேகம் 130 கி.மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.

பயண நேரம்

சென்னை-பெங்களூரு-மைசூர் வந்தே பாரத் ரெயில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர் வழித் தடத்தில் வேகம் அதிகரிக்கப்பட்ட பிறகு பயண நேரம் இன்னும் குறையும்.

தெற்கு ரெயில்வேயில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 5,081 கி.மீ. தூரத்துக்கு ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 2,037 கி.மீட்டருக்கு ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்