ஐபிஎல் டி 20 கிரிக்கெட் : பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
IPL T 20 CRICKET: Punjab Kings won by 4 wickets
-
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேம் கரணின் அதிரடி பேட்டிங்கால் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது சேம் கரண்,லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரது அதிரடியால் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முலான்பூர், மார்ச். 24
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேம் கரணின் அதிரடி பேட்டிங்கால் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஷாய் ஹோப் 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகளுடன் 33 ரன்களும், இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய இஷான் போரெல் 10 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் சேர்த்தனர்.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் : தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி – விசிக தலைவர் திருமாவளவன்
தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 29, மிட்செல் மார்ஷ் 20 ரன்களில் வெளியேறினர். 14 மாதங்களுக்குப் பிறகு களத்துக்கு திரும்பிய கேப்டன் ரிஷப் பந்த் 13 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 21 ரன்களில் ரன் அவுட் ஆனார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது சேம் கரண்,லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரது அதிரடியால் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சேம் கரண் 47 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார்.
லியாம் லிவிங்ஸ்டன் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்தார். முன்னதாக கேப்டன் ஷிகர் தவண் 22, ஜானி பேர்ஸ்டோ 9, பிரப்சிம்ரன் சிங் 26, ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்ட நாயகனாக சேம் கரண் தேர்வானார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்