Home செய்திகள் போக்குவரத்து துறையில் தனியார் மயமா ? : நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்

போக்குவரத்து துறையில் தனியார் மயமா ? : நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்

0
போக்குவரத்து துறையில் தனியார் மயமா ? : நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்

 

போக்குவரத்து துறையில் தனியார் மயமா ? : நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்

Is the transport sector private magic ? : Drivers protest by stopping the bus in the middle of the road

  • பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

  • பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம்

சென்னை, மே. 29

சென்னையில் இன்று மாலையில் திடீரென அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிமனைகளில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கினர். பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கிவிட்டனர். பயணிகளிடம் பஸ் போகாது என்று கூறிவிட்டனர்.

பேருந்துகள் நிறுத்தம்

பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் டிரைவர், கண்டக்டர்கள் பேருந்துகளை நிறுத்தியதால், ஏராளமான பயணிகள் நடுவழியில் தவிக்கின்றனர். பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்மலைக் கிராமங்களுக்கு தமிழக அரசு சாலைகள் அமைத்து தர வேண்டும் – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

போராட்டம்

அரசுப் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்குதலை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.