Home செய்திகள் கலைஞர் நூற்றாண்டு மகளிர் மாநாடு| சோனியா காந்தியும், பிரியங்காவும் இன்று சென்னை வருகை

கலைஞர் நூற்றாண்டு மகளிர் மாநாடு| சோனியா காந்தியும், பிரியங்காவும் இன்று சென்னை வருகை

0
கலைஞர் நூற்றாண்டு மகளிர் மாநாடு| சோனியா காந்தியும், பிரியங்காவும் இன்று சென்னை வருகை
sonia gandhi, priyanka arriving chennai for kalaignar centenary celebration for womens conference

கலைஞர் நூற்றாண்டு மகளிர் மாநாடு| சோனியா காந்தியும், பிரியங்காவும் இன்று சென்னை வருகை

kalaingar centenary women’s celebration | sonia gandhi, priyanka arriving chennai today

  • இரவு 10.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேரும் அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

  • நாளை மதியம் சோனியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய விருந்து கொடுக்கிறார்.

சென்னை, அக். 13

கலைஞர் நூற்றாண்டு மகளிர் மாநாடு| சோனியா காந்தியும், பிரியங்காவும் இன்று சென்னை வருகை : தி.மு.க. சார்பில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு மகளிர் மாநாட்டில் சோனியா காந்தியும், பிரியங்காவும் கலந்து கொள்கிறார்கள்.

இதற்காக இன்று மாலை 6.45 மணிக்கு டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து புறப்படும் சோனியா, பிரியங்கா இருவரும் இரவு 7.25 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தை சென்றடைகிறார்கள். இரவு 7.55 மணிக்கு விஸ்தாரா விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்கள்.

காங்கிரசார் உற்சாக வரவேற்பு

இரவு 10.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேரும் அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய விருந்து
நாளை மதியம் சோனியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய விருந்து கொடுக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சி அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் அல்லது முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெறும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயிலை தீ விபத்தில் சிக்கவைக்க சதி முறியடிப்பு

இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சி தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் ஒன்றாக சந்திக்கின்றனர். சோனியாவை தனியாக சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.

தொகுதி பங்கீடு

அதிலும் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எதுவும் அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை.
நாளை நடைபெறும் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு தொடர்பாக இரு தலைவர்களும் பேசவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மாலை 4.35 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் மாநாடு நடைபெறும் நந்தனம் திடலுக்கு செல்கிறார்கள். மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். பின்னர் ஓட்டலுக்கு திரும்புகிறார்கள். இரவில் ஓட்டலில் தங்குகிறாார்கள்.

டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் விமான நிலையம் செல்கிறார்கள். 6.55 மணிக்கு விஸ்தாரா விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.