கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துக்கள் முடக்கம்
Karti Chidambaram’s Rs 11.04 crore assets frozen
-
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மத்திய நிதியமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற்றதாக கூறி அவர் மீது இந்த வழக்கு பதிவு
-
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள அவரது 3 அசையும் சொத்துக்கள் மற்றும் 1 அசையா சொத்துக்கள் முடக்கம்
டெல்லி, ஏப். 19
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள அவரது 3 அசையும் சொத்துக்கள் மற்றும் 1 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன.
அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பியாகவும் மத்திய முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கான சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகைகள்; இந்திய அரசை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு
ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதற்காக அவர் கைதும் செய்யப்பட்டு உள்ளார். பல முறை அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணைக்காக நேரிலும் ஆஜராகி கார்த்தி சிதம்பரம் விளக்கமளித்து வந்து உள்ளார். இந்த நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அவருக்கு சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
முறைகேடாக வெளிநாட்டு நிதி
கர்நாடகா மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 3 அசையும் சொத்துக்கள் மற்றும் 1 அசையா சொத்துக்கள் அமலாக்கத்துறை சார்பில் முடக்கப்பட்டு இருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மத்திய நிதியமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற்றதாக கூறி அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.