-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்
-
இந்தியாவிலேயே முதன்மையான முதல்வராக நாளும் செயலாற்றும் தரணி போற்றும் தலைமகனே..
தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வரே! தாங்கள் நலமும், வளமும், நாளும் பெற்று, நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என உம்மை உளமாற வாழ்த்தி மகிழ்கிறேன்
சென்னை, மார்ச். 01
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின், 70-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு கட்சி தலைவர்கள். அரசியல் பிரமுகர்கள், திரைப்படத்துறையினர், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : மதுரை புதூர் அல் அமீன் பள்ளியின் வாசிப்பு இயக்கத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு – புத்தகங்களை வழங்கி வாழ்த்து
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில் தமிழ்நாட்டை தமது சீரிய தலைமையின் கீழ் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக மாற்றிகாட்டி உள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
குறிப்பாக கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் எண்ணற்ற திட்டங்களை வகுத்துத்தந்து, செம்மைபடுத்தி சீர்தூக்கியும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை, தமிழ்நாடு வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி, போலி ஆவணம் ரத்து சட்டம், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் உள்ளிட்ட, எண்ணற்ற மக்களுக்கு பயனுள்ள பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி, இந்தியாவிலேயே முதன்மையான முதல்வராக நாளும் செயலாற்றும் தரணி போற்றும் தலைமகனே..
தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வரே!
தாங்கள் நலமும், வளமும், நாளும் பெற்று, நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என உம்மை உளமாற வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு டாக்டர் ஆ.ஹென்றி தனது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.