உக்ரைன் சிறுவர்கள் 10 ஆயிரம் பேர் கடத்தல்; இனப்படுகொலை| அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு
Kidnapping of 10 thousand Ukrainian children; Genocide President Zelensky’s speech
-
ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது.
-
ரஷியா மீதான தடையால் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் எரிசக்தி வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன், செப். 20
உக்ரைன் சிறுவர்கள் 10 ஆயிரம் பேர் கடத்தல்; இனப்படுகொலை| அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது.
தற்போது உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரின் இலக்கு எங்கள் நிலங்கள், எங்கள் மக்கள், எங்கள் உயிர், எங்கள் வளங்கள் ஆகியவற்றை சர்வதேச விதிமுறை உத்தரவுக்கு எதிராக உங்களுக்கு (உலக நாடுகள்) எதிராக ஆயுதமாக மாற்றுவதற்காகத்தான்.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகள் கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். ரஷியா மீதான தடையால் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் எரிசக்தி வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கத்திய நாடுகள் மாற்று வழியை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை தானியங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடுகளாக திகழ்கிறது.
தற்போது ரஷியா கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. உக்ரைனில் இருந்து சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிலை என்ன?. அவர்களுக்கு உக்ரைனுக்கு எதிராக வெறுப்பு கற்றுக் கொடுக்கப்படும்.
ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட்
இது இனப்படுகொலை என்பது தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச கிரிமினல் கோர்ட், கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.