Home செய்திகள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம்

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம்

0

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம்

Letter from Tamil Nadu Health Department to Central Health Department to fill up 83 unfilled medical courses in All India Quota

  • அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு பொருத்தவரை 6 இடங்கள் காலியாக இருந்து அது வீணானது.

  • ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத இட ஒதுக்கீடுகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

சென்னை, அக். 13

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு என 15 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு பொருத்தவரை 6 இடங்கள் காலியாக இருந்து அது வீணானது.

இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடத்தை நிரப்ப வேண்டும் என தேசிய மருத்துவ துறை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

இதையும் படியுங்கள் : சியாச்சின் பனிமலையில் முதல் செல்ஃபோன் டவர் | ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் 

ஒவ்வொரு ஆண்டும் இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு வீணாவதை தடுக்கும் வகையில் மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத இட ஒதுக்கீடுகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.