
பிரபல மெக்டொனால்டு உரிமம் ரத்து ; போலி பீட்சா, பர்கர் விற்பனை – உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
License cancellation of famous McDonald’s fast food restaurant; Selling Fake Dumpling Pizza, Burger – Action by Food Safety Department
-
மெக் டொனால்டு துரித உணவு விற்பனைக் கடையில் மும்பை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு. போலியான பாலாடைக்கட்டி ( சீஸ்) துரித உணவுகள் தயார் செய்தது கண்டுபிடிப்பு
-
போலியான விளம்பரங்கள் வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றும் கடைகள் மீதும் நடவடிக்கை. மேலும் ‘பீட்சா’ மற்றும் பர்கர் விற்பனை செய்யும் இடங்களில் சோதனை செய்ய திட்டம்

மும்பை, பிப். 23
மெக் டொனால்டு நிறுவனம் 1940-களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை பரப்பியுள்ளது.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அகமதுநகரில் உள்ள ஒரு மெக் டொனால்டு துரித உணவக கடையில் போலி பாலாடைக்கட்டியில் தயாரான பர்கர், பீட்சா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.

இதையும் படியுங்கள் : கூட்டணிக்கு வாங்க, அதிக இடம் தருகிறோம் : அதிமுக அழைப்பை நிராகரித்தார் திருமாவளவன்
இதைத் தொடர்ந்து அந்த துரித உணவு விற்பனைக் கடையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு போலியான பாலாடைக்கட்டி ( சீஸ்) துரித உணவுகள் தயார் செய்தது கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அந்த உணவகம் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர்.மேலும் அந்த கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புதுறை நடவடிக்கை எடுத்தது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு கமிஷனர் அபிமன்யு காலே கூறியதாவது:- இதுபோன்ற போலியான பாலாடை கட்டி பீட்சா, பர்கர் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறான உணவுகளை உட்கொள்ளும் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு மற்றும் பாதிப்புகள் ஏற்படும்.

போலியான விளம்பரங்கள் வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோல துரித உணவுகளான ‘பீட்சா’ மற்றும் பர்கர் விற்பனை செய்யும் இடங்களில் சோதனை செய்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாக அவர் கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்