Home இந்தியா மக்களவைத் தேர்தல் : விடுதலை சிறுத்தைகளுக்கு – 2, மதிமுக.வுக்கு- 1 : திமுக தொகுதி பங்கீடு 

மக்களவைத் தேர்தல் : விடுதலை சிறுத்தைகளுக்கு – 2, மதிமுக.வுக்கு- 1 : திமுக தொகுதி பங்கீடு 

0
மக்களவைத் தேர்தல் : விடுதலை சிறுத்தைகளுக்கு – 2, மதிமுக.வுக்கு- 1 : திமுக தொகுதி பங்கீடு 
Lok Sabha Elections: 2 for VCK , 1 for MDMK: DMK Constituency Distribution

மக்களவைத் தேர்தல் : விடுதலை சிறுத்தைகளுக்கு – 2, மதிமுக.வுக்கு- 1 : திமுக தொகுதி பங்கீடு

Lok Sabha Elections: 2 for VCK , 1 for MDMK: DMK Constituency Distribution

  •  3 தொகுதிகள் கேட்ட நிலையில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த 2019 தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிட்ட நிலையில் மீண்டும் இதே தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கீடு

  • திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி நிரந்தரமாக திமுகவுக்கு பக்க பலமாக இருப்போம்.

Lok Sabha Elections: 2 for VCK , 1 for MDMK: DMK Constituency Distribution
Lok Sabha Elections: 2 for VCK , 1 for MDMK: DMK Constituency Distribution

சென்னை, மார்ச் 08

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் தொகுதிகள் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசிய நிலையில், 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மதிமுக தொகுதி ஒதுக்கீடு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. அதன்படி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது. அதன்படி, திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மதிமுக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விசிக தொகுதி பங்கீடு

மதிமுகவை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு உடன்படிக்கை செய்தார். தொகுதிப் பங்கீட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் கையெழுத்திட்டனர். அதன்படி, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 3 தொகுதிகள் கேட்ட நிலையில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த 2019 தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிட்ட நிலையில் மீண்டும் இதே தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Lok Sabha Elections: 2 for VCK , 1 for MDMK: DMK Constituency Distribution
Lok Sabha Elections: 2 for VCK , 1 for MDMK: DMK Constituency Distribution

தனித் தொகுதிகளில் விசிக

கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தனித் தொகுதிகளில் விசிக போட்டியிடும். 2019-ல் கையாளப்பட்ட பகிர்வு முறை இத்தேர்தலிலும் நடந்துள்ளது. விசிக, 2 தனித் தொகுதி ஒரு பொதுத் தொகுதி வலியுறுத்தியது. எனினும், அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு 2019-ல் கையாளப்பட்ட பகிர்வு முறைக்கு ஒப்புதல் தெரிவித்தோம்.

பானை சின்னம்

தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக உடன்பாடு தெரிவித்துள்ளது. எல்லா சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு தான் 2 தொகுதிகளில் போட்டி என்பதில் உடன்பட்டுள்ளோம். வேட்பாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தொகுதி பங்கீட்டை உறுதிசெய்ய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் வந்தார். பின்னர், வைகோ மற்றும் முதல்வர் ஸ்டாலின் தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட்டனர்.

இதையும் படியுங்கள் : பாலாற்றின் குறுக்கே அத்துமீறி அணையை கட்டினால் உடைத்து தகர்ப்போம் – தமிழக விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை

தொகுதிப் பங்கீட்டுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி நிரந்தரமாக திமுகவுக்கு பக்க பலமாக இருப்போம். மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி என்பது மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்.

Lok Sabha Elections: 2 for VCK , 1 for MDMK: DMK Constituency Distribution
Lok Sabha Elections: 2 for VCK , 1 for MDMK: DMK Constituency Distribution

தனிச் சின்னத்தில் மதிமுக

தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிடும். தொகுதி பங்கீட்டில் எங்கள் அனைவருக்கும் மனநிறைவு. மாநிலங்களவை இடம் குறித்து எதுவும் பேசவில்லை. இன்னும் 15 மாத இடைவெளி அதற்கு இருக்கிறது. அப்போது அது தொடர்பாக பேசுவோம்.” என்றார்.

இதுவரை திமுக கூட்டணியில், விசிகவுக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி, மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தொகுதி பங்கீடு செய்யப்படவில்லை.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்