Home செய்திகள் மக்களவை தேர்தல் : மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீட்டில் திரிணாமுல் – காங்கிரஸ் இழுபறி

மக்களவை தேர்தல் : மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீட்டில் திரிணாமுல் – காங்கிரஸ் இழுபறி

0
மக்களவை தேர்தல் : மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீட்டில் திரிணாமுல் – காங்கிரஸ் இழுபறி
Trinamool single contest in West Bengal - Mamata Banerjee announced

மக்களவை தேர்தல் : மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீட்டில் திரிணாமுல் – காங்கிரஸ் இழுபறி

Lok Sabha Elections: Trinamool-Congress tussle over seat-sharing in West Bengal

  • திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த காங்கிரஸ் முயன்றுள்ளது. 5 தொகுதிகளாவது ஒதுக்கும்படி தற்போது காங்கிரஸ் கோரிக்கை

  • திரிணமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘பைனாகுலர் மூலம் பார்த்தாலும், காங்கிரஸ் வெற்றி பெறும் 3-வது தொகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை ’’ என கூறினார். ஒருமித்த கருத்து ஏற்பட்டால், திரிணமூல்-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியீடு

TNDIPR
TNDIPR

கொல்கத்தா, பிப். 24

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வென்றது. 2021 தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் காங்கிரஸ் – திரிணமூல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, மேற்கவங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களை ஒதுக்குவதாக மம்தா கூறினார். இதற்கு காங்கிரஸ் ஒத்துக் கொள்ளாததால், மேற்குவங்கத்தில் தனித்து போட்டி என மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல் : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ராஜீவ் குமார் தலைமையிலான குழு ஆலோசனை

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த காங்கிரஸ் முயன்றுள்ளது. 5 தொகுதிகளாவது ஒதுக்கும்படி தற்போது காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் ஏற்கனவே வெற்றிபெற்ற பெர்காம்பூர் மற்றும் மால்டா தெற்கு ஆகிய தொகுதிகளுடன், தற்போது பாஜக வசம் உள்ள டார்ஜிலிங், மால்டா வடக்கு, ராய்கன்ச் ஆகிய தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNDIPR
TNDIPR

இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘பைனாகுலர் மூலம் பார்த்தாலும், காங்கிரஸ் வெற்றி பெறும் 3-வது தொகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை ’’ என கூறினார். ஒருமித்த கருத்து ஏற்பட்டால், திரிணமூல்-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்