
மாமன்னன் டிரைலர் வெளியீடு ; லைவ் கான்சர்டில் ரசிகர்களை சந்திக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்
Maamannan trailer release ; AR Rahman meets fans in live concert
-
‘ராசா கண்ணு’ மற்றும் ‘ஜிகு ஜிகு ரெயில்’ பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது
-
ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு
சென்னை, மே. 30
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி TSPSC தேர்வு எழுதிய தேர்வர் ; புலனாய்வு படையினர் விசாரணை
ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராசா கண்ணு’ மற்றும் ‘ஜிகு ஜிகு ரெயில்’ பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. மேலும், ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏ.ஆர்.ரகுமானின் லைவ் கான்சர்ட்
இந்நிலையில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள டிரைலர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் லைவ் கான்சர்ட் (Live Concert) நடைபெறவுள்ளதாக புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.